fbpx

Flash…! ஆகஸ்ட் 2-ம் தேதி கட்சி ஆரம்பிக்கும் பிரசாந்த் கிஷோர்…!

ஆகஸ்ட் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அரசியல் கட்சியாக மாறுகிறது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ். பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டம்.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது ஜன் சூராஜ் என்ற அமைப்பை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் தேதி அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சி போட்டியிடும் என்றார்.

பாட்னாவில் ஜான் சுராஜின் மாநில அளவிலான பயிலரங்கில், இந்த தகவலை கிஷோர் கூறினார், “முன்பு கூறியது போல், ஜான் சுராஜ் அக்டோபர் 2 ஆம் தேதி அரசியல் கட்சியாக மாறி அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். கட்சித் தலைமை போன்ற பிற விவரங்கள் உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

மேலும் இந்த பயிலரங்கில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் பேத்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். பாரத ரத்னா விருது பெற்ற சோசலிஸ்ட் தலைவரின் இளைய மகன் வீரேந்திர நாத் தாக்கூரின் மகள் ஜாக்ரிதி தாக்கூர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்துள்ளார். மறைந்த தாக்கூரின் மூத்த மகன் ராம்நாத் தாக்கூர் ஜே.டி.யூ எம்.பி மற்றும் மத்திய அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ‌

English Summary

Prashant Kishore will start his party on August 2

Vignesh

Next Post

சர்வதேச புலிகள் தினம் 2024!. வரலாறு!. முக்கியத்துவம்!. பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்!

Mon Jul 29 , 2024
International Tiger Day 2024!. History! Importance! Prime Minister Modi's instruction!

You May Like