fbpx

கர்ப்பிணிகளே அலர்ட்!… கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் மேக்கப் கிட்!… ஆண் குழந்தையாக இருந்தால் அதிக பாதிப்பு!

கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள், கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைப்பதாகவும், கருவில் இருப்பது ஆண் குழந்தையாக இருந்தால், பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது என்று கடந்த 2014ம் ஆண்டே அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு ஒன்றை ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் முகப்பூச்சுகளும், வாசனை பொருட்களும் பயன்படுத்துகின்றனர். ஊடகங் களும் தேவையற்ற பொருட்களை தாயின் அத்தியாவசியத் தேவை எனக் கூறி விற்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால், பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் என்பவர். இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மகளிர்‌களுக்கு வரும் 29 முதல் மே 15-ம் தேதி வரை...! உடனே விண்ணப்பிக்கவும்...! மிஸ் பண்ணிடாதீங்க...!

Fri Apr 14 , 2023
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சாராஸ்‌ மேளா 2023-24-ம்‌ ஆண்டிற்கு மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌ உற்பத்தி செய்யும்‌ பொருட்களை மேற்படி கண்காட்சியில்‌ அனைத்து மாவட்டங்கள்‌ சார்பாக மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌ தங்களின்‌ உற்பத்தி பொருட்களுடன்‌ கலந்து கொண்டு பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக அங்காடிகள்‌ அமைக்கப்பட உள்ளது. மேலும்‌ பெண்களுக்கு மிகவும்‌ பாதுகாப்பாக தங்கும்‌ வசதிகள்‌ மற்றும்‌ கர்காட்சி அரங்கிற்கு செல்ல போக்குவரத்து வசதிகள்‌ […]

You May Like