fbpx

கர்ப்பிணிகளே!… டீ, காபி குடிக்காதீர்கள்!… சர்க்கரை நோய் வருமாம்?

கர்ப்பிணி பெண் என்றாலே இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டும் என்று சுற்றியிருப்பவர்கள் அறிவுறுத்த தொடங்கிவிடுவார்கள். இது தவறானது. கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்கள் வரை குழந்தைக்கு உணவளிக்க கூடுதல் கலோரிகள் தேவையில்லை. முதல் மூன்று மாதங்களில் எடுத்துகொண்ட அதே உணவை குறிப்பாக ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும்.

பிறகு இரண்டு மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் கலோரி தேவைகள் நாள் ஒன்றுக்கு 340 கலோரி கூடுதலாக தேவைப்படும். அதே போன்று 500 கூடுதல் கலோரிகளை இலக்காக கொள்ள வேண்டும். உங்கள் கர்ப்பத்துக்கு முந்தைய எடை மற்றும் செயல்பாட்டின் நிலை அதிகமாக இருந்தால் இது குறித்து மருத்துவரிடம் பேசுவது நல்லது.

குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கிய வளர்ச்சி தொடர்கிறது. இளந்தாய் மற்றும் சிசு இருவருமே வலிமையையும் ஆற்றலையும் மீண்டும் பெற வேண்டும். பிரசவத்துக்கு பிறகு ஊட்டச்சத்து எடுப்பதன் மூலம் இவை மீட்பு மற்றும் நிரப்புதலுக்கு முக்கியமான ஒன்று.
ஏனெனில் தாயப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பல நுண்ணூட்டச்சத்துக்கள் (அயோடின், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட்) குறைவதால் இவை தேவைப்படலாம். அதே நேரம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் உள்ளன. குழந்தையின் உடல் வளர்ச்சி மன வளர்ச்சி இரண்டும் தாய்ப்பால் வழியாக பெறலாம்.

கர்ப்பிணி பெண் காஃபின் பானங்களை சேர்க்கலாம். ஆனால் அளவுகள் மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் கர்ப்பிணி பெண்கள் கர்ப்பமாக இல்லாதவர்களை விட காஃபின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக பெறுகிறார்கள். அதோடு காஃபின் அளவு அதிகரிக்கும் போது அது குழந்தையின் இரத்த ஓட்டத்தில் நுழையும் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ கல்லூரி, சுகாதார நிறுவனங்கள், கர்ப்பிணி பெண்கள் நாள் ஒன்றுக்கு 200 மில்லிகிராம் காஃபினை பாதுகாப்பாக எடுத்துகொள்ளலாம் என்கிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு கப் காஃபி குடிப்பது நல்லது.

கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிட கூடாது என்பதால் அசைவ உணவு விரும்பி கர்ப்பிணிகள் கவலை கொள்ளலாம். ஆனால் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடக்கூடாது என்பது கட்டுக்கதை. எனினும் கர்ப்பகாலத்தில் கடல் உணவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதன் பாதரச உள்ளடக்கம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்தானது. கடல் உணவுகள் எல்லாவற்றிலும் பாதரசம் அளவு உள்ளது. இது இயற்கையான நீர் நிலைகளில் உள்ளது. சில மீன்களில் பாதரசம் குறைவாக உள்ளது. இவை கர்ப்பகாலத்தில் சாப்பிட பாதுகாப்பானவை.

Kokila

Next Post

தலையில் ஏறி இறங்கிய லாரி…! துடிதுடித்து பலியான தாய்…! வீடு திரும்பும் போது நேர்ந்த சோகம்.!

Sat Nov 18 , 2023
மயிலாடுதுறை மாவட்டத்தில் மகனை பள்ளியில் விட்டுவிட்டு வரும்போது தாய்க்கு நேர்ந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சோளம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். […]

You May Like