தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி வழங்க பிரேமலதா விஜயகாந்த், டோக்கன் வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
Read More : மீண்டும் மீண்டுமா..? 27-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!