fbpx

சென்னையில் ‘பிரேமலு’ பட நடிகையை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ!!

பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, ரசிகர்கள் அவரை நசுக்கித்தள்ளிய வீடியாே இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், மமிதா பைஜு. சமீபத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவருக்கு தமிழ் திரையுலகிலும் அதிக ரசிகர்கள் உண்டு. ‘பிரேமலு’ படம் மூலம் 2கே கிட்ஸூக்கு பிடித்த நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மமிதா பைஜூ. மலையாளம் மட்டுமல்லாது, தமிழில் ஜிவி பிரகாஷூடன் ‘ரெபல்’ படத்திலும் நடித்திருந்தார். இதுமட்டுமல்லாது, முன்பு சூர்யா- பாலா கூட்டணியில் ‘வணங்கான்’ அறிவிக்கப்பட்டபோது மமிதாவும் அதில் நடிப்பதாக இருந்தது.

இப்போது, கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார் மமிதா. பிரபல மால் ஆன, வி ஆர் மாலில் ஒரு நகைக்கடை திறப்பிற்காக வந்திருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காகவும், அவர் அருகில் செல்வதற்காகவும், முண்டி எடுத்துக்கொண்டு நின்றனர். பாடி கார்ட்ஸ் இடையே கூடியிருந்த கூட்டத்தை பார்த்து மிகவும் அச்சத்துடன் நடந்து சென்ற மமிதா, ஒரு வழியாக கூட்ட நெரிசலில் இருந்து நகை கடைக்குள் சென்றார். அதேபோல நகைக்கடையை திறந்து வைத்துவிட்டு வெளியேறிய போதும் அதே கூட்டம் அவரை காண்பதற்காக வெளியில் நின்று கொண்டிருந்தது.

Read more ; வாக்களிப்பில் உலக சாதனை : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்!

Next Post

Raveena Tandon: KGF பட நடிகை மீது தாக்குதல்!! சத்தம் போட்டு அலறிய ரவீனா டாண்டன்.. நடந்தது என்ன?

Mon Jun 3 , 2024
english summary

You May Like