fbpx

Prescription: கேப்பிட்டல் எழுத்தில் மருந்துசீட்டு!… அது மாதிரியான அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை!… அமைச்சர் விளக்கம்!

Prescription: மருத்துவ பரிந்துரை சீட்டில் கேப்பிட்டல் (Capital) எழுத்தில் எழுத வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

கையெழுத்து பெரும்பாலும் படிக்க முடியாததாக உள்ளது. இதனால் பார்மசியில் மருந்துகளை பற்றிய விவரம் தெரியாதவர்கள் டாக்டர் கூறியுள்ள மருந்துகளுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றித் தரும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டில் மருந்து, மாத்திரைகளின் பெயர்களை கேப்பிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கேப்பிட்டல் (Capital) எழுத்தில் மருத்துவ பரிந்துரை சீட்டில் எழுத வேண்டுமென பரவிய தகவல் குறித்து விளக்கமளித்த அவர், அவ்வாறு தேசிய மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அந்த அறிவிப்பு சாதாரண பொது அறிவிப்பு என்றும் தமிழக சுகாதாரத்துறை அது மாதிரியான அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.

Readmore:ஆசிரியர் பணியிடங்களுக்கு உச்ச வயது வரம்பு 58 ஆக நிர்ணயம்…! யார் யாருக்கு பொருந்தும்…?

Kokila

Next Post

Andhra Pradesh: சட்டப்பேரவை தேர்தல்!… 99 வேட்பாளர்களின் முதல் பட்டியலை டிடிபி-ஜேஎஸ்பி கட்சிகள்!

Sun Feb 25 , 2024
Andhra Pradesh: ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 99 வேட்பாளர்களின் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜேஎஸ்பி கட்சிகள் அறிவித்துள்ளன. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றன. மறுபுறம், கூட்டணி, பிரசாரம், வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் […]

You May Like