ராணி எலிசபெத் காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க உள்ளார்.
ராணி எலிசபெத் தனது 96ம் வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரா கோட்டையில் கடந்த 8ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தனி விமானம் மூலம் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஏராளமான மக்கள், விஐபிக்கள் என மகாராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மகாராணியின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்களுக்கு 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா , நியூசிலாந்து , ஆஸ்திரேலியா பிரதமர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள்.
இந்தியாவில் இருந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகாராணியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் 17ம் தேதி இந்தியாவில் இருந்து லண்டன் புறப்படுகின்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து 19 ம் தேதி இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின்னர் மீண்டும் இந்தியா திரும்புகின்றார்…