Indian students: அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு பயந்து அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் வேலையை விட்டு விலகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்தார். சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்ளிட்டோரை அந்த நாட்டு அரசு நாடு கடத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகங்களில் உயர் கல்வி படிக்கும் இந்திய மாணவர்கள் பலர் பகுதி நேரமாக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு பயந்து இந்திய மாணவர்கள் வேலையை விட்டு விலகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மாணவர்கள் கூறுகையில், ‘‘ டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, உள்ளூர்மயமாக்கல் குறித்த அவரது அழுத்தம் முதலாளிகளுக்கு விசா ஸ்பான்சர்ஷிப்களை மிகவும் கடினமாக்கியுள்ளது.வேலைகள் கிடைப்பதும் கடினமாகி விட்டன’’ என்றனர். எப்.1 விசா பெற்றவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கூடுதல் பணம் சம்பாதிக்க விரும்பும் மாணவர்கள் விதிகளை மீறி அதிக நேரம் வேலை செய்கிறார்கள்.
இவ்வாறு எப்.1 விசாவில் உள்ள மாணவர்கள் பணிபுரிவது குறித்து அமெரிக்க அதிகாரிகள் நிறுவனங்களுக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்துகிறார்கள். இதனால் பகுதி நேரமாக பணி செய்யும் மாணவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 64,008 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டது.
Readmore: விஷமாக மாறிய யமுனை நதிநீர்!. இவ்வளவு ஆபத்தான இரசாயனங்கள் எங்கிருந்து வருகின்றன?. காரணம் என்ன?