fbpx

மாநாடு நடக்கும் வளாகத்திலேயே தங்கி இருக்கும் தலைவர் விஜய்..! கேரவனில் இருந்து வெளியே வந்தார்…!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழக கொள்கை விளக்க மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்கு காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்துள்ளனர். மேலும் பலர் வந்துகொண்டிருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. காலை முதலே தொண்டர்கள் வந்துவிட்டதால் உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் சூழ்நிலையும் ஏற்ப்பட்டுள்ளது.

நேற்று இரவு மாநாடு நடக்கும் திடலுக்கு சென்ற தவெக தலைவர் விஜய், அரங்கத்தை சுற்றி பார்த்துவிட்டு அரங்கத்தில் உள்ளே இருக்கும் கேரவனில் தங்கினார். புதுச்சேரி, விழுப்புரத்திற்கு சென்று தங்கி விட்டு இன்று மாநாட்டில் பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், விஜய் மாநாடு நடக்கும் இடத்திலேயே 2வது நாளாக தங்கியுள்ளார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மாநாடு நடக்கும் திடலில் முகாமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரவனில் இருந்தபடியே தொலைக்காட்சி, சிசிடிவி மூலம் மாநாட்டு திடலை பார்வையிட்டு குழுவுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மேலும் விஜய் மாநாட்டு திடலில் உள்ள கேரவனில் இருந்து வெளியே வரும் காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

English Summary

President Vijay is staying in the premises where the conference will take place..! He came out of the caravan…!

Kathir

Next Post

தள்ளாடும் தவெக மாநாடு... படையெடுக்கும் மக்கள் கூட்டம்.. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!

Sun Oct 27 , 2024
Crowds of people invading the Taveka conference.. Heavy traffic on the road.

You May Like