2015 முதல் 2023 வரை காசநோயை 17.7% ஆக குறைப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருப்பது குறித்து மத்திய மத்திய சுகாதார அமைச்சர் நட்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறியுள்ளதாவது :
“பாராட்டத்தக்க முன்னேற்றம்! காசநோய் பாதிப்பு குறைந்திருப்பது இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளின் விளைவாகும். ஒரு கூட்டு உணர்வின் மூலம், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
காசநோய் (TB) என்பது பொதுவாக நுரையீரலை பாதிக்கிறது. ஆனால் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் அல்லது பாதிக்கப்பட்டவர் துப்பும்போது காசநோய் காற்றில் பரவுகிறது. 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய காசநோய் (TB) நோயாளிகளில் 27 சதவிகிதத்தினர் இந்தியாவில் இருந்தனர்.
இதை தவிர, இந்தோனேசியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளனர். நாட்டின் மிகப் பரவலான தொற்றுநோய்களில் ஒன்றான காசநோய்க்கு 2025-ம் ஆண்டுக்குள் முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இருப்பினும், கொரோனா காரணமாக இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளன. இந்த நிலையில், 2015 முதல் 2023 வரை காசநோயை 17.7% குறைப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
Read more ; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா..!!