fbpx

11வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி!. மலர் மழை பொழிந்த ஹெலிகாப்டர்கள்!

PM Modi: 78வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் 11வது முறையாக மூவர்ணக் கொடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார். அப்போது, ஹெலிகாப்டர்கள் மலர் மழை பொழிந்தன.

நாடு முழுவதும் 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது . பிரதமர் நரேந்திர மோடி 11வது முறையாக செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றி சாதனை படைத்தார். அப்போது, ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து மலர் மழை பொழிந்து சாகசம் செய்தன.

78வது சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து விருந்தினர்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இங்கு ஆயிரக்கணக்கான நாட்டு மக்கள் பங்கேற்றுள்ளனர். தலைநகரில் மட்டும் பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், டெல்லி போலீசார் என தீவிர கண்காணிப்பு உள்ளது. செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாடில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ​​பிரதமர் ஒவ்வொரு முறையும் போலவே இன்றும் சிறப்பு தலைப்பாகை அணிந்திருந்தார். இது ஆரஞ்சு நிறத் தலைப்பாகை பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி தனது உடை மற்றும் உடைகளுக்காக பிரபலமாவது குறிப்பிடத்தக்கது.

2023-ம் ஆண்டு 77-வது சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வந்தபோது மஞ்சள் மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்திருந்தார். தலைப்பாகையைத் தவிர, அவர் வெள்ளை குர்தா மற்றும் கருப்பு ஜாக்கெட்டில் காணப்பட்டார். 

Readmore: இந்தியாவுடன் இரட்டை வேடம் போடும் ரஷ்யா!. பாகிஸ்தானுக்கு Supercam ட்ரோன்கள் விற்பனை!

English Summary

Prime Minister Modi hoisted the national flag for the 11th time! Helicopters showered with flowers!

Kokila

Next Post

புதிதாக விண்ணப்பித்துள்ளீர்களா..? பெண்களே இன்று உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 வரப்போகுது..!!

Thu Aug 15 , 2024
Today the entitlement of Rs.1,000 for this month will be credited to the bank account of the eligible women.

You May Like