fbpx

Modi: மார்ச்.4ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!… பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக தகவல்!

Modi: மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் மோடி மார்ச் 4ம் தேதி சென்னை வரவுள்ளது உறுதியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் ஆதரவை பெருக்குவதில் பா.ஜனதா அதிரடி வியூகங்களை வகுத்து செயல்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் தமிழகத்தில் உருவான மோடி எதிர்ப்பு அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பிரதமர் மோடி தமிழ், தமிழர் கலாச்சாரம் பற்றி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெருமையுடன் அடிக்கடி கூறி வருகிறார். வட மாநிலங்களில் இமாலய வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் எம்.பி.க்கள் வெற்றி பெறாதது டெல்லி தலைவர்கள் மத்தியில் பெரும் மனக்குறையாகவே இருந்து வருகிறது.

எனவே இந்த தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்புடன் செயல்படுகிறது. ஏற்கனவே ரகசிய சர்வே நடத்தி 10 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறு வேட்பாளர் தேர்வு பிரசார திட்டங்களையும் வகுத்துள்ளார்கள். தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய பிரதமர் மோடியும் தமிழகம் முழுவதும் ரவுண்டு கட்டும் வகையில் பல கட்ட பயண திட்டத்தை வகுத்துள்ளார்.

வருகிற 27-ந்தேதி பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்ட பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அன்று மதுரையில் தங்கும் மோடி சில முக்கிய தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் அடுத்த மாதம் மோடி தமிழகம் வருவது உறுதியாகி இருக்கிறது. 4-ந் தேதி (திங்கள்) அவர் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சென்னையில் நடைபெறும் பிரசார கூட்டத்தையும் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். பொதுக் கூட்டத்துக்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.

ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடல், பல்லாவரம் ஆகிய இடங்களை பார்த்துள்ளார்கள். பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் இடத்தை பார்த்து உறுதி செய்த பிறகு, இடம் முடிவாகும் என்றார்கள். சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கும் லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்

அடுத்த மாதம் தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில் மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதால் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து தமிழகத்தை குறி வைத்து பா.ஜனதா காய் நகர்த்துவதால் தேர்தல் களம் இப்போதே பரபரப்படைந்துள்ளது.

Readmore:அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட பிரதமர்!… வரும் 3ம் தேதி இதை கட்டாயம் செய்யவேண்டும்!

Kokila

Next Post

Annamalai: பாஜக ஆட்சிக்கு வந்தால்!… பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த அண்ணாமலை!

Sun Feb 25 , 2024
Annamalai: 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை ஒழித்து கள்ளுக்கடைகள் திறக்கப்படும், இந்து அறநிலையத்துறை நீக்கிவிட்டு கோவில்கள் அனைத்தும் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் என் மண் எண் மக்கள் நடைப்பயணத்தில் பேசிய அண்ணாமலை, 2019-ல் பா.ஜனதா 295 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதில் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். கடந்த 2021-ல் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 511 தேர்தல் வாக்குறுதியை […]

You May Like