Modi: அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட பிரதமர்!… வரும் 3ம் தேதி இதை கட்டாயம் செய்யவேண்டும்!

Modi: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், அடுத்த 100 நாட்களுக்கான தெளிவான செயல் திட்டத்தை அடுத்த மாதம் 3ம் தேதி தாக்கல் செய்யும்படி, மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் – மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்திய அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த 21ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த 100 நாட்களுக்கான செயல்திட்டங்களை வகுக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான தெளிவான செயல்திட்டத்தை வகுத்து, மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ள உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யுமாறும் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, மூத்த அரசு அதிகாரிகள் போன்ற அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை ஒருங்கே பெற்று, செயல் திட்டத்தை உருவாக்கவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

Readmore: முஸ்லிம் திருமண சட்டம் ரத்து.! “பொது சிவில் சட்டத்திற்கு வழிவகுக்கும்” அமைச்சர் கருத்து.!

Kokila

Next Post

Free Bus: மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்தில் இன்று முதல் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம்...!

Sun Feb 25 , 2024
மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். உதகையில் இன்று தொடங்கும் இந்த திட்டம், படிப்படியாக மற்ற மலை கிராமங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் […]

You May Like