fbpx

“ இந்த விஷயத்துல பிரதமர் மோடி சொன்னா, புடின் கேட்பாரு..” அமெரிக்கா கருத்து..

உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சமாதானப்படுத்த முடியும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கிட்டத்தட்ட ஓராண்டாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக உக்ரைன் மீதான போர் பார்க்கப்படுகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் போர் தொடர்ந்து வஒருகிறது..

இந்நிலையில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சமாதானம் செய்யலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை நிறுத்துவதையோ அல்லது புடினை சமாதானம் செய்வதையோ மோடி தாமதமாக்கிவிட்டாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதலளித்த ஜான் கிர்பி “ பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள விரும்பும் எந்த முயற்சியையும் நான் பேச அனுமதிப்பேன். உக்ரைனில் விரோதப் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்.

புடினுக்கு போரை நிறுத்த இன்னும் நேரம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி புடினை சமாதானப்படுத்த முடியும்.. பிரதமர் மோடி எந்த முயற்சியை மேற்கொள்ளத் தயாராக இருந்தாலும் பேச அனுமதிப்பேன். எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும். போர் இன்றே முடிவுக்கு வரலாம்… இன்றே முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்..

உக்ரைன் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு புடின் மட்டுமே பொறுப்பு.. அவர் அதை இப்போதே நிறுத்த முடியும். மாறாக, அவர் போரை தீவிரப்படுத்தி வருகிறது.. மக்கள் ஏற்கனவே இருந்ததை விட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்… இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்த நிலையில், அமெரிகாவின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பலமுறை பேசினார். போரை நிறுத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி உள்ளார்.. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பு அமெரிக்காவால் வரவேற்கப்பட்டது மற்றும் ஐரோப்பாவிலும், மோடியின் கருத்துக்கு நேர்மறையான விமர்சனம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

பாஜகவை எதிர்க்கிறாரா ஓபிஎஸ்…..? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால் பரபரப்பு….!

Sat Feb 11 , 2023
சசிகலா தன்னை மிரட்டி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டார் என்று ஆரம்பமான பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று பன்னீர்செல்வத்திற்கு அடுத்தடுத்து நடைபெற்ற பல அவமானங்களின் போதெல்லாம் அவருக்கு ஆதரவாக இருந்தது பாஜக தான் என்று சொன்னால் அது மிகையாகாது. பலமுறை பல இக்கட்டான சூழ்நிலையில், பன்னீர்செல்வம் நேரடியாக பாஜக தேசிய தலைமையையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து அவர்களிடம் கண்கலங்கியது தமிழகமே […]

You May Like