fbpx

Modi: சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்…! இன்று சரியான 3.30 மணிக்கு மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி…!

இன்று முதல் 6-ம் தேதி வரை தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.

தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் அரசு திட்டங்களை பிரதமர் தொடங்கி நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று காலை 10.30 மணியளவில், தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள பாவினி செல்கிறார். அதேபோல மாலை சென்னை நந்தனத்தில் பாஜக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொள்கிறார்.

அதிலாபாத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் மூலம் மின்சாரத் துறைக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும். தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ. 6,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பல திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சங்காரெட்டியில் சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல முக்கிய துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்‌.

ஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை மையப்பகுதியில் கோர் லோடிங் தொடக்கப் (initiation of core loading) பணியைப் பிரதமர் பார்வையிடுவார். ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கொல்கத்தாவில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு இணைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர். பெட்டியாவில் சுமார் ரூ. 12, 800 கோடி மதிப்பிலான பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, திறந்து வைக்கிறார். முஸாஃபர்பூர் – மோதிஹரி சமையல் எரிவாயு குழாய் திட்டத்தைத் தொடங்கி வைத்து, மோதிஹரியில் இந்தியன் ஆயிலின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை மற்றும் சேமிப்பு முனையத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Vignesh

Next Post

Exam: 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது...! மாணவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்...!

Mon Mar 4 , 2024
11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 12-ம் பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. […]

You May Like