fbpx

அனைவரது கவனத்தையும் பெற்ற பிரதமர் மோடியின் ஆடை..!! எங்கு தயாரித்தது..? விலை எவ்வளவு தெரியுமா..?

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசினார். நாடாளுமன்றத்திற்கு வந்த போது அவர் அணிந்திருந்த நீல நிற மேல் கோட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த ஆடை, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்டதாகும். தற்போது இந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த ஆடையை கரூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கா பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 28 குடிநீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட துணி மூலமாக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.2,000 என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட இந்த உடையை பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. இதை தான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்திருந்தார். பிரதமர் இந்த ஆடையை தயாரித்த கரூர் ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில் சங்கர் இதுகுறித்து பேசுகையில், மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட 9 விதமான வண்ண ஆடைகளை, ஸ்ரீரெங்கா பாலிமர்ஸ் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் பிரதமருக்கு பிடித்த வண்ணத்தில் அவருக்கு பிரத்யேகமாக ஆடை தயாரிக்கப்பட்டது. இத்தகைய ஆடையை தயாரிக்க 15 முதல் 25 பிளாஸ்டிக் பாட்டில்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஆடைகளுக்கு தண்ணீர் வண்ணம் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு மாறாக முதலில், நார் தயாரிக்கப்பட்டு, பின்னர் அது துணியாக மாற்றப்பட்டு, இறுதியாக, ஆடை தயாரிக்கப்படுகிறது. வழக்கமான வண்ணம் ஏற்றும் நடைமுறையில் இருந்து மாறுபட்டு இருப்பதோடு துணிகளின் சாயம் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிப்பதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

நான்கு மனைவிகள் பிரதான் மந்திரி திட்டத்தின் பணத்தை எடுத்துக்கொண்டு காதலருடன் ஓட்டம்!

Thu Feb 9 , 2023
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வந்த தொகையை எடுத்துக்கொண்டு நான்கு பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஓடிசென்ற சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம்  கிராமப்புறங்களில் உள்ள  ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் உயரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி ஒருவருக்கு வீடு கட்ட 2 லட்சம் ரூபாய்  மானியமாக அரசாங்கத்திலிருந்து கொடுக்கப்படும். இந்த […]

You May Like