fbpx

பிரதமர் மோடி குவைத் பயணம்!. 43 ஆண்டுகளில் முதல் இந்திய பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வரலாற்று சிறப்பு!.

PM Modi: பிரதமர் மோடி டிசம்பர் 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார்.கடந்த 43 ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய பிரதமரும் குவைத் சென்றதில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி முதல்முறை தனது பயணத்தை திட்டமிட்டுள்ளார். குவைத் நாட்டின் அமிராக இருக்கும் ஷேக் மீஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் சென்றார்

இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, பிற்பகலில் அமிரி டெர்மினலை சென்றடைகிறார். பின்னர் வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்று அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்திக்கிறார். இன்று மாலை ஷேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். இதையடுத்து வளைகுடா கால்பந்து தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

பாயன் அரண்மனையில் காலையில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதையடுத்து குவைத் நாட்டின் அமிரை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு இளவரசரை சந்திக்கிறார். இதன் தொடர்ச்சியாக குவைத் – இந்தியா இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

இந்தியா – குவைத் இடையில் வரலாற்று ரீதியில் பல ஆண்டுகளாக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக எண்ணெய் தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு 6வது மிகப்பெரிய வர்த்தக நாடாக கத்தார் திகழ்கிறது.

2023-24ஆம் நிதியாண்டில் மட்டும் 10.47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் எண்ணெய் இறக்குமதி மிகவும் முக்கியமானது. இதனை வலுப்படுத்தும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் பிரதமர் மோடியின் பயணத்தில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Readmore: 2024ல் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு திட்டங்கள்!. என்னென்ன தெரியுமா?

Kokila

Next Post

2025 வர போகுது.. புத்தாண்டு உறுதிமொழி எடுக்க ரெடியா? இதோ சில யோசனைகள்..!

Sat Dec 21 , 2024
As the new year approaches, let's take a look at what resolutions you can make this year.

You May Like