fbpx

3 புதிய குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் நீதியை உறுதி செய்யும்..!! – பிரதமர் மோடி

இந்த ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து தொடர்ந்து 11வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த ஆண்டு ஜூலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (பிஎஸ்ஏ), காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) கொண்டு வரப்பட்டது. இந்த சட்டங்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை நோக்கமாக கொண்டது. புதிய குற்றவியல் சட்டங்களில் தண்டனையை விட நீதிக்கு முன்னுரிமை அளித்துள்ளோம் என பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து, பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெண்களை மதிப்பது மட்டுமின்றி, உணர்வுபூர்வமாகவும் முடிவெடுப்பது மட்டுமல்லாமல், தன் குழந்தையை தரமான குடிமகனாக மாற்றுவதில் தாயிற்கு முக்கிய பங்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.

Read more ; அசத்தும் இந்தியா..! முதல் டெங்கு தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை ஆரம்பம்…!

English Summary

Prime Minister Narendra Modi on Thursday said that the three new criminal laws, implemented in July this year, aimed to ensure “justice for all”.

Next Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலை..!! மவுனம் கலைத்த பிரதமர் மோடி..!!

Thu Aug 15 , 2024
We Have To Think Seriously...: PM Modi Breaks Silence Over RG Kar Rape-Murder Case, Calls On State Govts To Act Tough

You May Like