பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 12-ம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தனது செய்தி குறிப்பில் தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 12.09.2022அன்று காலை 9.00 மணி முதல் 4 மணிவரை பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தருமபுரிமாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
NCVT/SCVT முறையில் ஐ.டி.ஐ பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் ஐ.டி.ஐ இறுதி ஆண்டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து பிரிவு பயிற்சியாளர்கள் முகாமில் கலந்துக்கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம். இது நாள் வரை ஐ.டி.ஐ பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்களும், தொழிற்பழகுநர் பயிற்சி பெற தயார் நிலையில் உள்ளவர்களும், நடைபெறும் முகாமில் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 94999-37454, 87786-62407 மற்றும் 94887-09322 ஆகிய கைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விவரங்களைதெரிந்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.