fbpx

மிருகங்களாக நடத்தப்படும் கைதிகள்!… உலகின் மிகவும் கொடூரமான சிறைச்சாலைகள் பற்றி தெரிந்துகொள்வோமா?

சில நாடுகளின் சிறைகளில் கைதிகள் மிருகங்களாகவே நடத்தப்படுகிறார்கள். அந்த சிறைகளை “பூமியில் இருக்கும் நரகம்” என்று அழைப்பதில் தவறேதும் இல்லை. அவற்றில் உலகின் மிக மோசமான சிறைச்சாலைகள் எவை என்று இன்று பார்ப்போம்.

அமெரிக்கா என்பது பிற நாடுகளுக்கு மனித உரிமைகளை கற்பிக்கும் நாடு. ஆனால், அமெரிக்காவில்கூட மனித உரிமைகளை பற்றி யோசிக்காத இடமொன்று உள்ளது. ரிக்கர்ஸ் சிறைச்சாலைதான் அந்த இடம். ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவாக சிறைக்கு அனுப்பப்படுபவர்கள்தான் இந்த சிறைக்கு வருவார்கள். சிறைக்குள், ஏராளமான கைதிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களில் சிலரின் கைகளிலும் கால்களிலும் எலும்புகள் முறிந்தும் சிலரின் உடலுக்குள் காயங்கள் சிலரின் தலையில் காயங்கள் போன்ற பல இன்னல்களுடன் வெளியில் வருகின்றனர். சோகமான உண்மை என்னவென்றால், இந்த சிறைச்சாலையில் இருக்கும்போது பெரும்பாலான மக்களின் மனநிலை பெரிதும் பாதிப்படைகிறது. நியூயோர்க் நகரத்தின் கரும்புள்ளியாக கருதப்படும் இந்த இடத்தை மூடுவதற்கு அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெனிசுவேலா சிறைச்சாலை உலகின் மிக மோசமானதாக கூறப்படுகிறது. போதைப்பொருட்கள், குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில், போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களால் இந்த இடம் நிரம்பி வழிகின்றது. இதனால் சபனேட்டா சிறை மிக மோசமான சிறையென கூறப்படுகிறது. 700 பேர் மட்டுமே இருக்கக்கூடிய இந்த சிறையில் 3700 கைதிகள் உள்ளனர். பெரும்பாலான கைதிகள் கழிப்பறைகளில் இருந்தே நீர் இருந்துகின்றனர் என்று கூறப்படுகிறது. 2013 இல் நடந்த கலவரத்தின்போது 16 கைதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் அமைந்துள்ள பான் குவான் சிறை, அனுபவமற்ற கூட்டம், நிதி பற்றாக்குறை மற்றும் மிகவும் வன்முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, இந்த சிறை உலகின் மிக மோசமான சிறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. சிறையில் 3500 பேர் மட்டுமே இருக்க முடிந்தாலும், 8000 க்கும் மேற்பட்டோர் இங்குள்ளனர். இந்த சிறைச்சாலையில் பலர் நீர் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த சிறை பற்றி மற்றுமொரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே கைதிகளுக்கு உணவு பரிமாறப்படுகிறது. அதுவும் அவர்களுக்கு சோற்றையும் சூப்பையும் மட்டுமே வழங்குகிறார்கள்.

ரஷ்யாவின் வோலோக்டாவில் உள்ள ஒரு தீவில் பெட்டக் தீவு சிறை அமைந்துள்ளது. ரஷ்யாவில் உள்ள மிக மோசமான குற்றவாளிகள் இங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை என்பது மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளில் கைதிகள் ஈடுபட்டால் தயக்கமின்றி சுடுமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு கைதிகள் 22 மணி நேரம் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படுகின்றனர். அவர்கள் வருடத்திற்கு இரண்டு பேரை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் எப்போதும் இல்லை. பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பெயர்போன சிறைச்சாலை இதுவென கூறப்படுகின்றது.

கொலராடோ மாநிலத்தில் அமைந்துள்ள இந்த USP புளோரன்ஸ் ADMAX சிறைச்சாலை அமெரிக்காவின் மோசமான குற்றவாளிகளை சிறைபிடித்து வைக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு அறையில் ஒரு கைதியும் அவர் அதில் ஒரு நாளைக்கு 23 மணி நேரம் தங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும்போது எந்த கைதிகளையும் ஒருவருக்கொருவர் வெளியில் பார்க்காமல் இருப்பது கைதியின் மன நிலையை மேலும் குறைக்கும். சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பு காணப்படுவதாக நிர்வாகம் நம்புகிறது.

வடகொரியாவில் அமைந்துள்ள அரசியல் கைதிகள் மற்றும் குற்றவாளிகளைக் கொண்ட இந்த கேம்ப் 22 சிறை, பல சோகமான செய்திகளை உலகுக்கு வழங்கிய சிறைச்சாலையாகும். குறிப்பாக, ஆவணப்படுத்தப்படாத சுமார் 50,000 வட கொரிய மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றத்திற்கான எண்ணம் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அனுப்பப்படும் என்று நினைக்கும் வட கொரிய அதிகாரிகள், தவறு செய்த குற்றவாளிகளோடு சம்பந்தப்படும் அனைவரையும் சிறையில் அடைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சிறைச்சாலையில் பல்வேறு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கைதிகள் பயன்படுத்தியதாக முகாம் 22 மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரேசிலில் 1956 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த கரந்திரு சிறைச்சாலை, அந்நாட்டு மக்கள் மற்றும் பிறநாட்டு சமூகத்தின் கடுமையான எதிர்ப்பால் 2002 இல் மூடப்பட்டது. சிறைச்சாலையில் இருந்த 8,000 க்கும் மேற்பட்ட கைதிகளில் பெரும்பாலானோர், சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் குறைவாக இருந்த நிலையில் இருந்தார்கள் என்றும், எயிட்ஸ் தொற்று நோய் கொண்டவர்கள்கூட அதில் இருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. 1992 இல், இந்த சிறையில் கலவரம் ஏற்பட்டதில் 111 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த சிறைச்சாலை திறக்கப்பட்டதிலிருந்து 46 ஆண்டுகளில் 1300 இறப்புகளை கண்டுள்ளது என்பது ஆச்சரியத்துக்கு உரித்தான விடயமாகும். இருப்பினும், இந்த இறப்புகளுக்கான காரணம் குறித்த கேள்விகளுக்கு பிரேசில் அரசாங்கம் பதிலளிக்கத் தவறிவிட்டது.

Kokila

Next Post

பிரதமரின் YASASVI கல்வி உதவித் தொகை திட்டம்!… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

Mon Jul 31 , 2023
பிரதமர் மோடியின் YASASVI கல்வி உதவி திட்டத்தின் கீழ் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான எழுத்துத் தேர்வு குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் YASASVI கல்வி உதவி திட்டத்தின் கீழ், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தங்கள் மேற்படிப்பை மேற்கொள்ள உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள், சீர்மரபினர், மற்றும் பழங்குடியின […]

You May Like