புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(57). இவர் தனியார் நிறுவன காவலாலியாக வேலை பார்த்த வந்தார். இவருடைய மனைவி காளியம்மாள் என்கின்ற காஞ்சனா இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், முத்துக்குமரன் நேற்று காலை புதுவை வெள்ளாளர் வீதியில் இருக்கின்ற வங்கி அருகே உள்ள வாய்க்காலில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வருகின்ற காவல் துறையினர் முத்துக்குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதுகுறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில் நள்ளிரவு சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் உறங்கிக் கொண்டிருந்த முத்துக்குமரன் பையில் கையை விட்டு பணத்தை தேடிய நிலையில் விழித்துக் கொண்ட முத்துக்குமரன் அவர்களை தடுக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட அந்த இளைஞர்கள் முத்துக்குமரனை கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் மயங்கி அவர் கீழே விழுந்து கிடப்பதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
ஆகவே அவர்கள் 3 பேரும் நடத்திய தாக்குதல் காரணமாக தான் இவர் உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சந்தேக மரணம் என்று பதிவு செய் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ள காவல்துறையினர் 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை புதுச்சேரி காவல்துறையினர் வெளியிட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றன.