புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நண்பனாக நடித்த ஜெகதீஷ் திடீரென போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’புஷ்பா’. இப்படத்தில் அல்லு அர்ஜூன் நண்பனாக கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜெகதீஷ். இவர், துணை நடிகை ஒருவர், தனிமையில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த நடிகை நவம்பர் 29ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஜெகதீஷ் மீது புகார் அளிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக போலீஸார் நடிகர் ஜெகதீஷைத் தேடி வந்தனர். இறுதியாக நேற்று பஞ்சகுட்டா போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், புஷ்பா 2 படத்திலும் ஜெகதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்க வேண்டிய பகுதிகள் பாதி படமாக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.