fbpx

திடீர் உடல் நலக்குறைவு.! பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி.!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனது சகோதரர் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அவர் தனது ‘X’ சமூக வலைதளம் மூலமாக தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் ” ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரை உத்திர பிரதேசத்தை அடையும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் எனக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்”.

விரைவில் குணமடைந்து எனது சகோதரரின் தேசத்திற்கான யாத்திரையில் பங்கு கொள்ள காத்திருக்கிறேன். தற்போது பனாரஸ் நோக்கி செல்லும் காங்கிரஸ் கமிட்டியின் சகாக்களுக்கும் எனது சகோதரருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருக்கிறார். பிரியங்கா காந்தி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினர் இடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை பெரிதும் சார்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆச்சாரியா என்பவர் ராகுல் காந்தி பிரியங்கா காந்திக்கு உரிய மரியாதையை கொடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தனது சகோதரரின் யாத்திரைக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியினரை சற்று உற்சாகமடைய செய்திருக்கிறது.

Next Post

சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? அட இது புதுசா இருக்கே..!! வேட்புமனுவில் தகவல்..!!

Fri Feb 16 , 2024
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ராஜஸ்தானில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சோனியா காந்தியின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை சோனியா காந்தி மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தகவல் வெளியானது. அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் போட்டியிடவில்லை என்று அவரே கூறினார். இதுவரை அவர் போட்டியிட்ட உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இம்முறை பிரியங்கா காந்தி […]

You May Like