fbpx

புரோ கபடி லீக் 11வது சீசன்!. அக்டோபர் 18 முதல் தொடக்கம்!. முழுவிவரம் இதோ!

PKL Season 11: புரோ கபடி லீக்கின் 11வது சீசன் வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு லீக்குகளின் ஒன்றான ப்ரோ கபடி லீகின் 10 சீசன் கடந்த மார்ச் 4ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதிப் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸை 28-25 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது புனேரி பால்டன்ஸ். இதன் மூலம் முதல் முறையாக அந்தத் தொடரை வென்று சரித்திரம் படைத்தது அந்த அணி.

இந்தநிலையில், புரோ கபடி லீக்கின் 11வது சீசன் வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக வீரர்கள் ஏலம், கடந்த ஆகஸ்ட் 15,16ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் புரோ கபடி லீக் வரலாற்றில் புதிய சாதனையாக 8 வீரர்கள் ரூ.1 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

ஹைதராபாத்தி ஹச்சிபௌலி உள்விளையாட்டரங்கில் முதல் கட்டம் தொடங்குகிறது. இதேபோல், 2வது கட்டம் நவம்பர் 10 ஆம் தேதி நொய்டாவிலும், டிசம்பர் 3 ஆம் தேதி புனேவிலும் நடைபெறும். மேலும், பிளே ஆஃப் ஆட்டங்களுக்கான இடம், தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், 11வது சீசன் ஆட்டங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பப்படும்.

Readmore: 30 வட கொரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை!. வெள்ளத்தைத் தடுக்கத் தவறிய அதிரடி நடவடிக்கை!

English Summary

Pro Kabaddi League Season 11 to get underway from October 18

Kokila

Next Post

ஒன்றுக்கும் மேற்பட்ட PPF கணக்கு உள்ளதா?. அக்.1 முதல் புதிய விதிகள்!. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

Wed Sep 4 , 2024
PPF account new guidelines from October 1, 2024: What you need to know

You May Like