fbpx

ஜூன் 14ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்..!! ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் தற்போது காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும் என்றும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முறை பில் போடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனைப் போலவே 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருகின்ற ஜூன் 9ஆம் தேதியன்று மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

Chella

Next Post

தேதி குறிச்சாச்சி..!! 234 தொகுதிகளையும் குறிவைக்கும் நடிகர் விஜய்..!! எதிர்பார்ப்போடு காத்திருக்கும் மாணவர்கள்..!!

Mon May 29 , 2023
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என கூறப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஜூன் 3ஆம் தேதி 234 தொகுதிகளை சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதும், அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் பல கட்சிகளில் செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜயகாந்த் தேமுதிகவையும், சரத்குமார் […]

You May Like