பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை வெளியிட்டு பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தமிழகத்தில் 1998-க்கு பின்னர் புதியதாக ஆவண எழுத்தர் உரிமங்கள் வழங்கப்படவில்லை. பதிவுக்கு வரும் ஆவணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கூடுதல் ஆவண எழுத்தர்களை நியமிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதைக் கருத்தில் கொண்டு உரிய அமைப்பு மூலம் சிறப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு ஆவண எழுத்தர்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் ஏறத்தாழ 20,000 நபர்கள் பயன் பெறுவர் என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பதிவுத்துறைதலைவரின் கருத்துருவை ஏற்று புதிதாக ஆவண எழுத்தர் உரிமங்களை கீழ் கண்ட நடைமுறைகளை பின்பற்றி வழங்க பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.
1982-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஆவணை எழுத்தர் உரிம விதிகளுக்கு உரிய திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக அரசுக்கு கருத்துக்களை அணுப்புமாறு பதிவுத்துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.