fbpx

மதமாற்ற தடை சட்டம்..!! விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கடந்த 2003ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, வழக்கு தொடர்பாக திருமாவளவனுக்கு தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Read More : மதமாற்ற தடை சட்டம்..!! விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

English Summary

The Mayiladuthurai Sessions Court has issued an order to issue a warrant against the leader of the Liberation Tigers Party, Thirumavalavan.

Chella

Next Post

திடீரென ரத்து செய்த மத்திய அரசு..!! பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு..!! எதற்காக தெரியுமா..?

Wed Jul 31 , 2024
Annamalai has welcomed the central government's temporary cancellation of the tender notice for extracting ore sand from Kurinjankulam and surrounding areas in Tenkasi district.

You May Like