அடடே சூப்பர் நியூஸ்..!! இனி மாதந்தோறும் ரூ.1,000 இவர்களுக்கும் கிடைக்கும்..!! வெளியான அறிவிப்பு..!!

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதனால் புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதிபெறும் குடும்பத் தலைவிகளை மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்து, ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இருந்து ரூ.1000 வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிதாக யாருக்கெல்லாம் வாய்ப்பு..?

* புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள்

* புதிதாக திருமணம் ஆன பெண்கள்

* முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு.

* முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.

மேலும், ரேஷன் கடைகளில் விரைவில் புதிய பொருள் ஒன்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, இனிமேல் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தேங்காய் எண்ணெய் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

Read More : கணவர் வேறொரு நடிகையுடன் உடலுறவு..!! நேரில் பார்த்த காதல் மனைவி..!! பிரபல நடிகர் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

While the work of issuing new ration cards was suspended due to the Lok Sabha elections, the food distribution department has informed that the work has now started.

Chella

Next Post

சிறுமியின் உள்ளாடைகளை கழற்றுவது பலாத்காரம் ஆகாது...! உயர் நீதிமன்றம் தீர்ப்பு...!

Thu Jun 13 , 2024
Removing Girl's Innerwear, Undressing Oneself Not 'Attempt To Rape' But Indecent Assault: Rajasthan High Court

You May Like