fbpx

ரூ.921 கோடிக்கு சொத்து..!! தாயாரின் புடவை மட்டுமே ரூ.2 கோடி..!! சுயேட்சையின் வேட்புமனு தள்ளுபடி..!! என்ன காரணம்..?

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ.921 கோடி சொத்து காட்டிய சுயேட்சை ஒருவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் தோப்பூரைச் சேர்ந்த கன.வேழவேந்தன் (50). இவர், மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளில், கடைசி நபருக்கு முந்தைய நபராக மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, மனுதாக்கல் முடிய வேண்டிய கடைசி நேரத்தில் அவருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இவரும் கடைசி ஆளாக மனுதாக்கல் செய்துவிட்டு கிளம்பினார்.

இதனைத்தொடர்ந்து, மனு பரிசீலனையின் போது வேழவேந்தனின் மனு முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் மனு தள்ளுபடியானது. அவர் தனது மனுவில், தனக்கு ரூ.921 கோடி சொத்து இருப்பதாகவும், தாயாரின் புடவை ரூ.2 கோடி எனவும் தெரிவித்துள்ளார். வழக்குகள், வாகனங்கள், கடன்கள், நிதிநிறுவன முதலீடு என 90 சதவீத கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலே தெரிவித்திருந்தார்.

இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் திருச்சி மாவட்டம் மாம்பட்டி ஜமீன் வாரிசு. எங்களது ஆளுகையானது துங்கபத்ரா முதல் கன்னியாகுமரி வரை இருந்தது. 2011ஆம் ஆண்டு போட்டியிட்டு 300 வாக்குகள் வாங்கியிருந்தேன்” என்றார்.

Read More : Gold | வரலாற்றில் புதிய உச்சம்..!! ரூ.51,000 தாண்டியது ஒரு சவரன் தங்கம்..!! சாமானிய மக்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

Crime | பணியாளரின் ஆடைகளை கழற்றி சித்ரவதை..!! நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்த கடை உரிமையாளர்..!!

Fri Mar 29 , 2024
கடையில் ஏலக்காய் திருடியதாக கூறி பணியாளரை தாக்கி ஆடைகளை கழற்றி சித்ரவதை செய்ததோடு நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் மளிகை பொருள் விற்கும் கடை நடத்தி வருபவர் தயாலாஜிபாய் பானுஷாலி. இவரது கடையில் தினமும் கூட்டம் அலைமோதும். இதனால் கடையில் சில பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் கடையில் இருந்து ஏலக்காய் உள்ளிட்ட […]

You May Like