Gold | வரலாற்றில் புதிய உச்சம்..!! ரூ.51,000 தாண்டியது ஒரு சவரன் தங்கம்..!! சாமானிய மக்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் 1,120 ரூபாய் உயர்ந்து, 51 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. நேற்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50,000 ரூபாயை எட்டி புதிய உச்சம் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,120 ரூபாய் அதிகரித்து 51,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 80 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 80,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More : செம ஜாலி..!! இறுதித்தேர்வு அட்டவணையில் அதிரடி மாற்றம்..!! மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை..!!

Chella

Next Post

’சசிகலா காலில் ஏன் விழுந்தேன்’..? விடாமல் துரத்தும் கேள்விக்கு நச்சுனு பதில் கொடுத்த எடப்பாடி..!!

Fri Mar 29 , 2024
”நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் […]

You May Like