ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் எஸ்எம்எஸ் மற்றும் ஆன்லைன் மூலம் PF தொகையின் இருப்பை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
குறுஞ்செய்தி மூலம் இருப்பை எப்படி பார்ப்பது…?
உங்கள் UAN எண் இபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் PF இருப்பு பற்றிய தகவலை SMS மூலம் பெறலாம்.
இதற்கு, 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO என டைப் செய்து அனுப்ப வேண்டும்.
அதன்பிறகு, ஒரு குறுஞ்செய்தி மூலம் PF பற்றிய தகவல் கிடைக்கும். இந்த சேவை ஆங்கிலம், பஞ்சாபி, மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.
PF இருப்புக்கு, உங்கள் UAN, வங்கிக் கணக்கு, பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருப்பது அவசியம்.
ஆன்லைன் மூலம் எப்படி சரிபார்ப்பது…?
ஆன்லைன் மூலம் உங்கள் இருப்பைச் சரிபார்க்க, epfindia.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து இ-பாஸ்புக் என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் passbook.epfindia.gov.in என்னும் பக்கத்திற்கு உங்களை எடுத்து செல்லும். அதில், உங்கள் பயனர்பெயர் (UAN எண்), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.
அடுத்து நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், இப்போது நீங்கள் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்ந்தெடுத்த பின்னர் இ-பாஸ்புக்கில், உங்கள் EPF இருப்பைக் காணலாம்.