fbpx

சூரியனை ஆய்வு செய்யும் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்!. 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது!.

PSLV C-59: சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று பகல் 3.08 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகப்பட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும். ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 3.08 மணிக்கு தொடங்குகிறது. இதனை முடித்துக்கொண்டு நாளை (புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது.

Readmore: ஐடி பேராசிரியரை மணக்கும் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து!. திருமண தேதி அறிவிப்பு!

English Summary

PSLV probes the Sun. C-59 rocket!. The 25-hour countdown begins today!.

Kokila

Next Post

ஜன.20, 2025க்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் பேரழிவு ஏற்படும்!. ஹமாஸுக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்!.

Tue Dec 3 , 2024
Trump: ஜனவரி 20, 2025க்குள் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கில் பேரழிவு ஏற்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்கள்கிழமை (டிசம்பர் 2) காஸா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய தண்டனையை வழங்கும் என்று டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். […]

You May Like