fbpx

பொதுத் தேர்வு அலர்ட்!… A, B என 2 வகையான வினாத்தாள்கள்!… காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை எவ்வித குழப்பம் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது. குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும். இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.

இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.

Kokila

Next Post

சட்லஜ் ஆற்றில் கிடைத்த மனித மூளையின் திசுக்கள்!… வெற்றி துரைசாமியுடையதா?… DNA பரிசோதனையில் தொடரும் தாமதம்!

Sun Feb 11 , 2024
இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி […]

You May Like