தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்வு அறைக்கு வரும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தேர்வு அறையில் பணியில் இருக்கும் ஆசிரியர்களும் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தகவல் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.