fbpx

நிபா வைரஸ் எதிரொலி.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. வைரஸ் பாதித்த 14வயது சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கேரளா மாநிலத்தில் ‘நிபா வைரஸ்’ தாக்குதல் அதிகரித்து வருவதால் வைரஸை எதிர்கொள்வதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை பின்வருமாறு..

  • ‘காய்ச்சல் , தலைவலி , மயக்கம், சுவாசப் பிரச்னை, மனநலப் பிரச்னை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
  • அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். காய்கள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
  • கிணறுகள், குகைப்பகுதிகள் , தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
  • நோயாளிகளை பரிசோதிக்கும் சுகாதாரத்துறையினர் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும்.
  • ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும். நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; ITR alert: வரியை குறைக்க இந்த நான்கு விலக்குகளைப் பெற மறக்காதீர்கள்..!

English Summary

Public Health Department of Tamil Nadu has issued necessary guidelines to deal with Nipah virus attack in Kerala state.

Next Post

இந்திய எல்லையில் ஊடுரூவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!! பின்னணி என்ன?

Sun Jul 21 , 2024
This comes days after pictures emerged Pakistani army training the terrorists in the PoK to infiltrate to the Indian side of the border.

You May Like