fbpx

’’ஜிப்மர் மருத்துவமனையில் பாராசிட்டமால் கூட இல்லை’’ … தமிழிசை சவுந்தராஜன் விளக்கம்…

ஜிப்மர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் , முறையான சிகிச்சை அளிப்பதில்லை என பல்வேறு புகார்கள் குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்தார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மீது தொடர்ந்து புகார்கள் எழுவதை அடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் பாராசிட்டாம்மால் மாத்திரை கூட இல்லையாமே , அதற்கும் தட்டுப்பாடு உள்ளதாமே என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.’’ உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அக்கறை உள்ளது . அப்படி எல்லாம் இல்லை ’’ என முதலில் கூறிய நிலையில் பின்னர் மருத்துமனை இயக்குனரை அழைத்து பேசினார். அவர் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் என கூறியதை அடுத்து ’’ ஆம் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் , தவறுதான் அது பெரிய தவறுதான் . விரைவில் பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் ’’ என தெரிவித்தார்.

ஜிப்மர் மருத்துவமனை மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மருத்துவமனையில் மருந்துகள் கிடைப்பதில்லை. மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிப்பதில்லை என்பது உள்பட பல புகார்கள் உள்ளன. தொற்ற நோய்கள், நீரிழிவு நோய் , மன நோய் , இருதய நோய் , நரம்பு அறுவை சிகிச்சை புற்றுநோய் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கும் முக்கிய மருந்துகள் கிடைப்பதில்லை. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கொரோனாவால் 2 ஆண்டுகளாக இப்பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதுவரை குறைகள் குறைகளாக உள்ளது.

Next Post

11 நாள் தொடர் விடுமுறை அளித்த நிறுவனம்…எந்த நிறுவனம்னு பாருங்க…

Thu Sep 22 , 2022
தங்கள் பணியாளர்களின் மனநிலையை கருத்தில்கொண்டு பிரபல இ.காமர்ஸ் நிறுவனம் ஒன்று 11 நாளுக்கு தொடர் விடுமுறை அளித்துள்ளது. பண்டிகைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை. இந்த மாதிரி நேரத்தில்தான் அதிகப்படியான விற்பனை நடக்கும் என்பதால் இந்த நேரங்களில் கூடுதல் நேரம் பணிச்சுமை இருக்கும். ஆனால் , பிரபல இ.காமர்ஸ் நிறுவனமான மீஷோ .. தங்களின் பணியாளர்களுக்கு 11 நாள் தொடர் விடுமுறை அளித்துள்ளது. துர்காபூஜை , […]

You May Like