fbpx

அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் 116 காலி பணியிடங்கள்…..! உடனே விண்ணப்பியுங்கள்…..!

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் போன்ற பதவிகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன் மூலமாக, ஒட்டுமொத்தமாக 116 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஒதுக்கீடு அரசு அறிவிப்பின்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வருவாய் துறை மூலமாக வழங்கப்பட்ட சரியான சான்றிதழை சமர்ப்பித்து இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் இட ஒதுக்கீடு பரிசளிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் போன்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விதிகள், மற்றும் வழிகாட்டுதல்கள் கல்வி வயதுவரம்பு ஊதியம் போன்ற விவரங்களை www.igmcri.in என்ற கல்லூரி இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் அதில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூவாய் 250க்கும் மற்ற பிரிவினர் 500 ரூபாய்க்கும் பெருந்தலைவர் காமராஜர் மருத்துவர் சங்கம் என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும்.

விண்ணப்பங்களை இயக்குனர், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி என்ற முகவரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் புதுவையில் நேர்காணலுக்கு மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

இவ்வளவு குறைந்த விலையில் தக்காளியா..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Mon Jul 17 , 2023
நாட்டில் பல இடங்களில் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, NAFED மற்றும் NCCF மூலம் செயல்படும் விற்பனை மையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்படும் என்று கர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் புதுடெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், அர்ரா போன்ற […]

You May Like