PM Modi | இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லட்டம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு தேசியத்தின் பக்கம் நிற்கிறது. தொழில் துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றி வருகிறது. என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். எம்.ஜி.ஆரை அவமதிக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தனர். காங்கிரஸ் – திமுக கூட்டணி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை. திமுகவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. வளர்ச்சிக்காக பணியாற்றுவதில் எதிர்க்கட்சிகள் என் மீது கோபத்தில் உள்ளன” என்றார்.
English Summary : Prime Minister Modi said that MGR and Jayalalitha gave excellent governance in Tamil Nadu.