fbpx

பஞ்சாப் முதல்வருக்கு 2ஆம் திருமணம்..! மருத்துவரை மணக்கிறார் பகவந்த் மான்..!

ஏற்கனவே திருமணமாகி 6 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இன்று இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.

நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்தவர்தான் பகவந்த் மான் (வயது 48). இவருக்கு ஏற்கனவே இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணமாகி சீரத், தில்ஷன் என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர். தற்போது இந்தர்பிரீத் கவுர், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

பஞ்சாப் முதல்வருக்கு இரண்டாவது திருமணம் இன்று..! யாரை மணக்கிறார் தெரியுமா.?  - TamilSpark

இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மானுக்கு 2-வது திருமணத்துக்கு அவரது தாயார் ஹர்பால் கவுரும், சகோதரி மான்பிரீத் கவுரும் ஏற்பாடு செய்துள்ளனர். குர்பிரீத் கவுர் என்ற டாக்டரை சண்டிகாரில் இன்று பகவந்த் மான் மணக்கிறார். மணவிழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியோ ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

2 நாட்களில் ரூ.1,000-க்கு மேல் குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..

Thu Jul 7 , 2022
சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,064 குறைந்துள்ளது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
#Gold Rate..!! தங்கம் விலை அதிரடி உயர்வு..!! இந்த விலைக்கு வாங்கலாமா? வேண்டாமா?

You May Like