fbpx

”ஒரே ஒரு வீடியோ மட்டும் போடுங்க”..!! ரஜினியிடம் கோரிக்கை வைத்த பாஜக..? அரசியலில் பெரும் பரபரப்பு..!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், களம் காணப்போகும் கட்சி எது என்பதிலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருந்தாலும் முதலில் அவர்களின் செயல்பாடுகள் மக்களை மகிழ்விக்கும் வகையில் இருந்துவிட்டு பின்பு தான் அவர்களின் சுயரூபமே தெரியவந்ததாக கூறுகின்றன.

அதேபோல அதிமுக பாஜக கூட்டணி முறிவு, சிலர் மத்தியில் வரவேற்கும் வகையில் இருந்தாலும் பாஜக தனது கூட்டணியை பலமாக்க வேண்டுமென்பதற்காக பல யுக்திகளை கையாண்டு வருகிறது. பாஜகவை பொறுத்தவரை பாமக, சமத்துவ மக்கள் கட்சி என கூட்டணி வைத்து அதிமுக-வை திணற விட வேண்டும் என எண்ணி வருகிறது. அந்தவகையில் நடச்சத்திர பட்டாளங்களையும் விலைக்கு எடுத்து வருகிறது என்றே கூறலாம்.

ராதிகா சரத்குமார் என தொடங்கி நகைச்சுவை நடிகை ஆர்த்தி வரை பாஜக-வில் இணைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரஜினிகாந்தையும் இந்த பட்டியலில் சேர்க்க முயற்ச்சித்து வருகின்றனர். ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலின் போதே அரசியலில் இறங்குவார் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், அது ஏமாற்றத்தையே கொடுத்தது. இருப்பினும், அவ்வப்போது மோடி தலைமையில் உள்ள அரசு குறித்து பெருமை பேசுவதையே வழக்கமாக வைத்திருப்பார்.

குறிப்பாக, 1000 மற்றும் 500 நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பு வந்தது குறித்து மிகவும் ஆதரவளித்து பேசினார். இதுபோல மோடி அதிரடியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து பேசுவதால், இவரை நட்சத்திர பட்டாளத்தில் இணைக்க முயற்சித்து வருகின்றனர். நீங்கள் கட்சியில் சேரவில்லை என்றாலும் பராவயில்லை, பாஜகவுக்கு ஆதரவளிப்பது போல ஓர் வீடியோ மட்டும் போடுமாறு கேட்டு வருகின்றனர். இந்த தகவல் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Read More : பிரபல தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் திடீர் தற்கொலை..!! சோகத்தில் திரையுலகம்..!! நடந்தது என்ன..?

Chella

Next Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் விஜய்..!! ’விசில் போடு’ பாடலால் வெடித்த பூகம்பம்..!!

Mon Apr 15 , 2024
விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தில் ‘விசில்போடு’ லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வரவேற்பை குவித்து வருகிறது. இதனுடனே, அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்க்கு பொருந்தாத காட்சிகள் திரைப்படத்தில் இருப்பது குறித்து சர்ச்சைகளும் எழுந்துள்ளன. கோலிவுட் என்பது தமிழக அரசியல் மற்றும் ஆட்சி பீடத்துக்கான ராஜபாட்டையாக விளங்கி வருகிறது. இந்த வழியில் பல நட்சத்திரங்கள், சினிமா மூலமாக சேகரித்த பிரபல்யம், ரசிகர் பட்டாளம் ஆகியவற்றை தேர்தல் அரசியலில் வாக்குகளாக மாற்றி வெற்றி […]

You May Like