பிரபல தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் திடீர் தற்கொலை..!! சோகத்தில் திரையுலகம்..!! நடந்தது என்ன..?

கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரின் மஹாலட்சுமி லே அவுட்டில் வசித்தவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் (55). இவர் அப்பு பப்பு, மஸ்த் மஜா மாடி, ஸ்னேஹிதரு, ராம்லீலா உட்பட சில படங்களை தயாரித்துள்ளார். அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாக ஓடி வருவாயும் கிடைத்தது. பட தயாரிப்பு மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

பெங்களூரில், ‘ஜெட்லாக்’ என்ற பெயரில் பப் நடத்துகிறார். சமீபத்தில் நடிகர் தர்ஷன் நடித்த காட்டேரா படத்தின் வெற்றியை கொண்டாட, இந்த பப்பில் தான் பார்ட்டி நடந்தது. நிர்ணயித்த நேரத்தை விட, அதிக நேரம் பார்ட்டி நடந்தது குறித்து, சுப்ரமண்யநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. தர்ஷன், ராக்லைன் வெங்கடேஷ் உட்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

திரைப்படம் ஒன்றில் தன் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யவும், இவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஏற்பாடுகளும் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை, 9.00 மணிக்கு மேலாகியும், இவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை; தட்டியும் பதில் இல்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து பார்த்த போது, ஜெகதீஷ், தூக்கில் தொடங்கிய நிலையில் கிடந்தார்.

உடனடியாக கீழே இறக்கி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், பரிசோதித்த டாக்டர், ஜெகதீஷ் இறந்து விட்டதாக கூறினர். இவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இவரது மாமியார் சமீபத்தில் காலமானார். இவர் மீது ஜெகதீஷ் அதிகமான அன்பு வைத்திருந்தார். மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். பொருளாதார பிரச்சனையும் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Read More : செம குட் நியூஸ்..!! லைசென்ஸ் வாங்க இனி எங்கும் அலைய தேவையில்லை..!! வீட்டிற்கே வந்துவிடும்..!!

Chella

Next Post

”ஒரே ஒரு வீடியோ மட்டும் போடுங்க”..!! ரஜினியிடம் கோரிக்கை வைத்த பாஜக..? அரசியலில் பெரும் பரபரப்பு..!!

Mon Apr 15 , 2024
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், களம் காணப்போகும் கட்சி எது என்பதிலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருந்தாலும் முதலில் அவர்களின் செயல்பாடுகள் மக்களை மகிழ்விக்கும் வகையில் இருந்துவிட்டு பின்பு தான் அவர்களின் சுயரூபமே தெரியவந்ததாக கூறுகின்றன. அதேபோல அதிமுக பாஜக கூட்டணி முறிவு, சிலர் […]

You May Like