fbpx

Pornhub-ஐ பயன்படுத்தி, போருக்கு படைவீரர்களை சேர்க்கும் புடின் ராணுவம்.. வெளியான புதிய தகவல்..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கூலிப்படையான வாக்னர் குழு, ஆபாச வீடியோ தளமான Pornhub-ஐ பயன்படுத்தி ராணுவ வீரர்களை சேர்ப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கூலிப்படையான வாக்னர் குழு, ஆபாச வீடியோ தளமான Pornhub-ஐ பயன்படுத்தி ராணுவ வீரர்களைச் சேர்ப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும், Pornhub-ல் இயங்கும் ஒரு விளம்பரத்தின் வீடியோ கிளிப்பை அந்த நாளிதழ் மேற்கோளிட்டுள்ளது. அந்த வீடியோ கிளிப்பில் பேசும் ஒரு பெண் “நாங்கள் உலகின் மிகச் சிறந்த தனியார் இராணுவம். நாங்கள் ரஷ்யாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போராளிகளை ஆட்சேர்ப்பு செய்கிறோம்..” என்று கூறுகிறார்.. இதற்குப் பிறகு, வாக்னர் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தொலைபேசி எண் திரையில் தோன்றுகிறது.

வாக்னர் குழுவை விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜின் நிறுவினார்..உக்ரைன் போர் தொடர்பான முடிவுகளை புடின் தன்னிச்சையாக எடுப்பதாக யெஞெனி பிரிகோஜின் குற்றம்சாட்டினார்.. மேலும், தான் தனித்து விடப்பட்டதாகக் கூறி, ரஷ்ய ஜனாதிபதி தன்னை முற்றிலுமாக தவித்து விட்டதாக சமீபத்தில் குற்றம் சாட்டினார். உக்ரைனின் பாக்முட்டில் வாக்னர் குழு பெரும் இழப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

வரும் 26 ஆம் தேதி நடக்கிறது அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல்….! பணிகள் தீவிரம்….!

Sat Mar 18 , 2023
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி குறித்த சட்ட விதிமுறை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் உறுப்பினர் கட்சியில் தொடர்ந்து 10 வருடங்கள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். தலைமை பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5️ வருடங்கள் பணி புரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விரும்பும் உறுப்பினரின் பெயரை கட்சியின் அமைப்பு ரீதியாக இருக்கின்ற மாவட்டங்களில் குறைந்தது […]

You May Like