ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.. இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. புடினுக்கு ஆபத்தான நோய்கள் இருப்பதாகவும், அவர் நீண்ட காலம் உயிருடன் இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.. இந்த நிலையில் ரஷ்ய அதிபரின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.., மேலும் அவர் கடுமையான தலைவலி, மங்கலான பார்வை மற்றும் ஆகியவற்றால் அவதிப்படுகிறார் என்றும், இதனால் மருத்துவர்கள் பீதியடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
புடினின் உடல்நலக்குறைவு குறித்து தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வரும் ரஷ்ய ஜெனரல் எஸ்விஆர் டெலிகிராம் சேனல், ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்து சமீபத்திய தகவல்களை வெளியிட்டது. அந்த அறிக்கையில் “ புடினின் வலது கை மற்றும் காலில் பகுதியளவு உணர்திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது.. அவரின் நாக்கு உணர்ச்சியற்று சுவை அறியாத அளவுக்கு மோசமடைந்துவிட்டது.. அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் குழு முதலுதவி அளித்துள்ளது.. பல நாட்கள் மருந்து சாப்பிட்டு ஓய்வெடுக்குமாறு புடினுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.. இருப்பினும், ரஷ்ய அதிபர் புடின் ஓய்வெடுக்க மறுத்துவிட்டார்.. அதற்கு பதிலாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பற்றிய அறிக்கைகள் புடினுக்கு வழங்கப்பட்டது.. புடினின் உடல்நிலையால் அவரின் நெருக்கமான உறவினர்கள் அதிக கவலையடைந்துள்ளனர்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
முன்னதாக புடினுக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் அவர் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்க மாட்டார் என்றும் தகவல் வெளியானது.. மேலும் புடின் ஒரு வருடத்திற்கு மேல் உயிர் வாழ மாட்டார் என்று ரஷ்யாவின் முன்னாள் எம்பி இலியா பொனோமரேவ் தெரிவித்திருந்தார்.. இதே போல் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..