fbpx

இன்றுமுதல் மருந்து அட்டைகளில் QR Code கட்டாயம்!… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி!

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட முக்கியமான 300 மருந்துகளின் அட்டைகளில் QR Code அல்லது பார் கோடு கட்டாயம் அச்சிடப்பட வேண்டும் என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தாலும் சந்தையில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கவும் முன்னணி நிறுவன பெயரிலான மருந்தின் தரத்தை உறுதி செய்வதற்கும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதாவது சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட முக்கியமான 300 மருந்துகளின் அட்டைகளில் க்யூ ஆர் அல்லது பார் கோடு அச்சிடப்பட வேண்டும். இதனை ஸ்கேன் செய்யும் போது மருந்தின் உட்கூறுகள் விவரம், தயாரிப்பாளர் விவரம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய முடியும். இதன் மூலம் மருந்தின் உண்மைத் தன்மையை நுகர்வோர்கள் எளிதில் அறியலாம் எனவும் இந்த நடைமுறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

குட் நியூஸ்...! சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம்...! டிசம்பர் 2024 வரை நீட்டிப்பு...!

Tue Aug 1 , 2023
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 2023 ஜூன் 1 ஆம் தேதி சாலையோர வியாபாரிகளுக்காக பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தில் பிஎம் ஸ்வநிதி (PM SVANidhi) என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியின் உதவியுடன், சாலையோர வியாபாரிகள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன்கள் மற்றும் பரிந்துரை கடிதம் (எல்.ஓ.ஆர்) பெற விண்ணப்பிக்கலாம். சாலையோர வியாபாரிகள் தங்களது ஸ்வநிதி கடன் விண்ணப்ப நிலையையும் இதில் சரிபார்க்கலாம். பிரதமரின் ஸ்வநிதி […]

You May Like