fbpx

ராணி எலிசபெத் விடைபெற்றார்!… சொல்லொண்ணாத்துயரில் பக்கிங்ஹாம் அரண்மனை …

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் ராணி எலிசபெத் உலகை விட்டு மறைந்தார்.

பிரிட்டன் மகாராணிக்கு எலிசபெத் அலெக்சாண்டிரா என்பது இயற்பெயர் . அவருக்கு தற்போது வயது 96 . கடந்த 1952ம் ஆண்டு முதல் ராணியாக முடிசூடிக் கொண்டார். தற்போது 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மிக நீண்ட காலமாக ராணியாக பதவியில் இருந்தவர்களில் 2வது நபர் என்ற பெருமை இவருக்கே சேரும். சமீபத்தில்தான் 70 ஆண்டு நிறைவடைந்ததற்கான ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. பிரிட்டன் வரலாற்றில் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த சாதனையை எலிசபெத் முறியடித்து சாதனை படைத்துள்ளார் .

54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன் வெல்த் எனப்படும் பிரிட்டிஷ் ஆண்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் ராணி எலிசபெத் பொறுப்பு வகித்திருந்தார். பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதிலும் ராணி எலிசபெத்தின் பங்கு மிக முக்கியமானது.  இரண்டாம் உலகப்போர் கலக்கட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்சசில் உட்பட 15 பிரதமர்களின் காலத்தில் அரசியாக பொறுப்பு வகித்துள்ளார்

சில நாட்களாகவே உடல்நிலையில் லேசான மாற்றங்கள் இருந்து வந்துள்ளன. வயது மூப்பு காரணமாக சரியாக அவரால் முன்பு போல் நடக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படியே பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.

லிஸ்ட்ரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து நேராக ராணி எலிசபெத்திடம் சென்று வாழ்த்து பெற்று பின்னர் தான் பதவியேற்றார். அதுதான் அவர் பங்கேற்ற கடைசி பொது நிகழ்வு . மருத்துவர்கள் கூறியதால்தான் அவர் வேறு எந்த இடத்திலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யாமல் அரண்மனையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு பங்கேற்றார்.

இந்நிலையில் பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு உடல் நிலை மோசமடைந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியானது. தொடர்ந்து மருத்துவக்குழுவினர் அவரை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளால் நாடே சோகத்தில் மூழ்கியது.. இந்நிலையில் தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அவர் மறைந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

உறவினர்களுக்கு தகவல் அனுப்பியதும்  இளவரசர் சார்லஸ் (73) , இளவரசி அன்னே (72) , இளவரசர் ஆண்ட்ரூ (62) மற்றும் இளவரசர் எட்வர்ட் (58 ஆகியோர் அரண்மனைக்கு விரைந்தனர்.

நினைவுகளை வெளியிட்ட மோடி : 2015ம் ஆண்டு லண்டன் சென்றிருந்தபோது ராணியுடனான சந்திப்பில் எடுத்த புகைப்படத்தை பிரதமர் வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.

.

Next Post

சுங்கக்கட்டணத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் … அமைச்சர் எ.வ.வேலு மத்திய அரசுக்கு கோரிக்கை

Fri Sep 9 , 2022
சுங்கக்கடடணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எ.வ.வேலு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள, சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பால சாலைக்கு, […]
’சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு’..! மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர்..!

You May Like