விலங்குகள் மீது அன்பு கொண்டவரான 2-ம் ராணி எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்தாராம்….
ராணி எலிசபெத் தனது 18வது பிறந்த நாளின் போது கார்கி இன நாய் வாங்கி வளர்க்கத் தொடங்கினார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு பிடித்தமான நாயை அவர் வாங்கி வளர்க்கத் தொடங்கினாராம். அவைகள் , மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாராம். அது மட்டுமின்றி பிற விலங்குகள் மீதும் அவர் அன்பு காட்டி வந்துள்ளார். ஒருமுறை தான் பயன்படுத்திய குதிரையை பாசமாக கட்டியணைத்து தழுவிக் கொடுத்துள்ளார்.

லண்டனில் உள்ள விலங்கியல் சங்கததிற்கு வாழ்நாள் முழுக்க ஆதரவு அளித்திருந்தார். ராயல் வின்ட்சர் குதிரைக் கண்காட்சியை 70 ஆண்டுகளாக அவர்தான் முன்னேற்ற்திற்கும் வளர்ச்சிக்கும் பல வழிகளில் உதவியாக இருந்துள்ளார். சில நேரங்களில் ஒரே நேரத்தில் கூட அவரைச் சுற்றி 9 செல்லப்பிராணிகள் சுற்றிக் கொண்டிருக்கும். அவர் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து கொண்டே இருப்பார்களாம். அதற்கு டூக்கி, கேண்டி, சூசன், ஸ்பார்க் என விதவிதமான பெயர்கள் சூட்டி அழைப்பார். தற்போது ராணியை பார்க்காத சோகத்தில் ஏக்கத்தில் இருக்கின்றதாம்…

கார்கிகளின் உணவு ….: ராணி தனது கார்கிகளுக்கு தனி அறை ஒதுக்கி இருந்தார். அதற்கு கார்கி அறை என்பது பெயர் . ஒவ்வொரு நாளும் அதற்காக சிறப்பான பெட்ஷீட்டுகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொன்றிற்கும் மெத்தென தூங்குவதற்கனா வசதிகள் இருந்தது. மிகவும் சிறப்பான உணவு அளிக்கப்பட்டது. முயல் இறைச்சி , மாட்டிறைச்சி ஒவ்வொரு நாளும் கார்கிகளுக்கு உணவு சமைக்கவே தனியாக சமையல்காரர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். ஒவ்வொரு வேளையும் புதிய உணவைத்தான் கார்கிகளுக்கு கொடுக்க வேண்டும்.

முக்கியமாக ஒவ்வொன்றிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள வெள்ளி தட்டில்தான் பரிமாற வேண்டும்.ஒவ்வொரு கார்கிக்கும் ஏற்றவாறு தனித்தனியாக உணவு மெனு ஒதுக்கப்பட்டுள்ளது அதன்படிதான் சாப்பாடு தர வேண்டும். சில நேரங்களில் ராணி ஒவ்வொன்றிற்கும் உணவு தருவார். சீனியாரிட்டி படி ஒன்றன் பின் ஒன்றாக அளிப்பார். அனைத்து கார்கிக்களும் சண்டை போடாமல் சேட்டை செய்யாமல் தன்னுடைய முறை வந்தால் மட்டுமே வாங்கிக் கொள்ளும் . அதுவரை அரை வட்டத்தில் தன் இடத்தை விட்டு நகராமல் உட்கார்ந்திருக்கும்.

முயல் அப்போதே வேட்டையாடப்பட்டோ அல்லது அப்போதே வாங்கிவரப்பட்டு சமைத்து தர வேண்டும். அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். எனவே கார்கிக்களுக்கு புதிய பொம்மைகள், விருந்து என கார்கிக்களையும் மகிழ்ச்சியாகவே வைத்துக்கொள்வார். பார்ப்பவர்களுக்கு பிறந்தாலும் ராணி வீட்டு நாயாக பிறக்க வேண்டும் என தோன்றுமே ….!