fbpx

Raadhika Sarathkumar | ”அண்ணாமலையுடன் பழகி வருகிறேன்”..!! ”40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்”..!! நடிகை ராதிகா பேச்சு..!!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “திமுக – காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்துடன், தமிழகத்தில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம்” என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய நடிகை ராதிகா சரத்குமார், “என் கணவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், பாஜக உடன் இணைந்த பிறகு முதன்முறையாக இந்த மேடையில் நாட்டின் நாயகன் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம். எங்கு சென்றாலும் திருக்குறளை சொல்லி, தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் பிரதமர் மோடி பெருமை சேர்த்து வருகிறார். நான் நடிகர் எம்.ஆர். ராதாவின் மகள். 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து உழைத்து கொண்டிருக்கிறேன்.

இன்று ஒரு தேசிய கட்சியுடன் இணைந்து மேடையில் பேசும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை, பெருமை இருக்கிறது. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் தலைவன் நன்றாக இருக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும். இதோடு நின்று விடாமல் 2026 தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். அன்னப்பறவை போல் பால் எது, தண்ணீர் எது என தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலையிடம் எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை. இப்போது தான் பழகிக்கொண்டிருக்கிறேன். என் கணவருக்கு அண்ணாமலையுடன் நல்ல பழக்கம் உண்டு. பாஜக கண்டெடுத்த சிப்பிக்குள் முத்து தான் அண்ணாமலை. மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். பாஜக வெற்றி தமிழகம் வரை தொடர வேண்டும்” என்று பேசினார்.

Read More : Officer | “ஊழலை எந்த விதத்திலும் ஏற்க முடியாது”..!! அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி..!!

Chella

Next Post

ADMK | தமிழகமே எதிர்பார்க்கும் பரபரப்பான வழக்கில் நாளை தீர்ப்பு.!

Fri Mar 15 , 2024
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நடைபெறும் அதிகாரப்பூர்வ தேதியை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்தல் பற்றிய அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது . தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி […]

You May Like