fbpx

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிரடி மாற்றம்..!! கோவை, தேனிக்கு புதிய ஆட்சியர்..!! தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

➦ சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

➦ கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

➦ தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை நியமனம்.

➦ செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

➦ சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங், தேனி கலெக்டராக நியமனம்.

➦ கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம்.

➦ உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மதுமதி நியமனம்.

➦ சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம்.

➦ கோவை மாவட்ட ஆட்சியராக பவன் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

➦ வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜயந்த் நியமனம்

Read More : Central Bank Of India-வில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.86,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

The Tamil Nadu government has ordered the transfer of 38 IAS officers in Tamil Nadu.

Chella

Next Post

வெறும் ரூ.50,000 இருந்தால் இந்த கார் உங்களுக்கு சொந்தம்.. அட்டகாசமான அம்சங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..

Sun Feb 9 , 2025
MG Comet EV: Take this bully car to your home for just Rs. 50,000

You May Like