fbpx

பரிதாப நிலையில் ராதிகா..!! பறந்து பறந்து பிரச்சாரம் செய்யும் கேப்டன் மகன்..!! பரபரப்பில் தேர்தல் களம்..!!

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் மற்றும் விஜய பிரபாகரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியான தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விஜய பிரபாகரன் செய்யும் பிரச்சாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக, வாகனங்களில் வேட்பாளர்கள் சென்று பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், விஜய பிரபாகரன் நேரடியாக வீடுகளுக்கே சென்று பிரச்சாரம் செய்கிறார்.

இதனால், அவருக்கு அங்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் மக்களுடன் எளிதாக பழகி வருகிறார். அதேபோல பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பரப்புரையை ரத்து செய்து சென்னை சென்றார். அதாவது, பிரச்சாரத்திற்கு கூட்டம் சேராததால் பரப்புரையை ரத்து செய்துவிட்டார். பின்னர், கடைசியில் சரத்குமார் மட்டும் அவனியாபுரம், பெருங்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகாவை களமிறக்கியதை பாஜக நிர்வாகிகள் விரும்பவில்லை. இதனால், விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். இதனால் பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, நாடார் வாக்காளர்கள் பலரும் ராதிகா மீது அனுதாபம் வைத்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

Read More : ’படம் பிடிக்கவில்லை என்றால் செருப்பால் அடிங்க’..!! ஹாட்ஸ்பாட் திரைப்பட இயக்குநர் வேதனை..!!

Chella

Next Post

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக இருக்க…! இந்த இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்…..!

Tue Apr 2 , 2024
நம் வாழ்க்கை முறையில் ஒவ்வொன்றிக்கும் வாஸ்து சாஸ்த்திரங்களை கடைப்பிடுக்கின்றனர். அதிலும் திசைகள் மிகவும் முக்கியமானது.நெருப்பு, நீர், காற்று, வானம் மற்றும் பூமி என அனைத்திற்கும் தனித்தனி திசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.வாஸ்து படி, கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் நீர் பாத்திரங்களை வைப்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த திசைகளில் தண்ணீர் தொட்டிகளையும் வைக்கலாம். வீட்டில் எந்த இடத்தில் தண்ணீரை வைக்கக் கூடாது என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். நீங்கள் ஒரு வீட்டில் […]

You May Like