’படம் பிடிக்கவில்லை என்றால் செருப்பால் அடிங்க’..!! ஹாட்ஸ்பாட் திரைப்பட இயக்குநர் வேதனை..!!

திட்டம் இரண்டு, அடியே படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். இவர், சமீபத்தில் இயக்கிய ஹாட்ஸ்பாட் திரைப்படம் திரைக்கு வந்தது. ஆண் – பெண் உறவு மற்றும் சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரைப் பெற்றது. ஆனால், போதிய திரையரங்கம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இல்லாததால் வசூலில் திணறி வருகிறது. இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “படம் பார்த்தவர்கள் நன்றாக ரசித்துப் பார்த்தனர்.

ஆனால், நாங்கள் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. மலையாளப் படத்திற்கு அவ்வளவு ஆதரவு தருகிறீர்கள். நாங்கள், உண்மையிலேயே நல்ல படம்தான் எடுத்திருக்கிறோம். நம்பிக்கையுடன் சொல்கிறேன். இப்படம் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். பிடிக்கவில்லையென்றால் என்னை செருப்பால் கூட அடியுங்கள்” என வேதனையுடன் கூறியிருக்கிறார்.

Read More : பெரும் சோகம்..!! பிரபல தமிழ் நடிகர் விஸ்வேஸ்வர ராவ் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Chella

Next Post

சத்தீஸ்கரில் பயங்கரம்: 8 பேர் சுட்டுக் கொலை

Tue Apr 2 , 2024
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் நக்சலைட் எனக் கூறப்படும் மாவோயிஸ்ட் பொதுவுடமைக் குழுவைச் சார்ந்த 8 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இது குறித்து பஸ்தர் பகுதி ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், “கங்காலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லேந்த்ரா கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, […]

You May Like